பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 133

சிவபெருமானைப் புகழ்ச்சிச் சொற்களோடு முன்னிலைப் படுத்த எண்ணி அணங்கின் மணவாளா என்றார்.

‘உமையம்மையின் கணவனே என விளித்துள்ள மையைச் சற்று ஆழ நோக்கி ஒர் உயரிய உண்மையை உணரவேண்டும். ஏனெனில் இதில் தமிழ்ப் பண்பாடு அமைந்துள்ளது. இறைவன், இயற்கை, பெண்மை இவற்றைப் போற்றுவதென்பது தமிழ்ப் பண்பாடும் மரபும் ஆகும். இறைவனின் தோற்றப் பொலிவு இயற்கையில் ஒளி விடுகின்றது. எங்கெங்கெல்லாம் அழகு கொலு வீற்றிருக் கின்றதோ அங்கங்கெல்லாம் இறைவன் திருக்கோயில் கொண்டிருப்பதாக நம் முன்னோர் கருதினார்கள். திருமுருகாற்றுப்படை இத்தகைய இடங்களைப் பட்டிய விட்டுக் கூறும். மூன்றாவதாகப் பெண்மையின் மென்மை யில் இறைவனின் அருள் உள்ளத்தைக் காணலாம். கடவுள் எங்கும் இலங்கினாலும் தாயைப் படைத்து அவளிடத்தில் அளவற்ற அன்பையும் படைத்திருக்கிறான் என்பர். இத்தகு பெருமைக்குரிய பெண் பிறவியினைச் சிறப்பித்துப் பேசுவது தமிழர் மரபாகும். மங்கையராகப் பிறப்ப, தற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்பர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஏனெனில் ‘அவர் பங்கயக் கை நலம் பார்த்துத் தான் பாரில் அறங்கள் வளருமம்மா’’ என்று மேலும் குறிப்பிடுவர். மை அம்மை அறம் வளர்த்த நாயகி யாகத் திகழ் கிறாள். சிவன் அளித்த இருநாழி நெல் கொண்டு காஞ்சி புரத்தில் காமாட்சியாகக் கணக்கற்ற அறங்களை இயற்றி னாள் என்று நூல்கள் கூறும். “..! “ز

உலக வழக்கில் இன்ன ஆணினுடைய மனைவி தான் இவர் என்று பெண்ணை அறிமுகப்படுத்தும் மரபு உளது. ஆனால் தமிழின் தொல்பழம் வழக்கு இல்வாறில்லை. நிருமுருகாற்றுப்படையில் முருகப் பெருமானை நக்கீரர் பெருமான் மறுவில் கற்பின் வாணுதல் கணவ என்று குறிப்பிட்டுள்ளார். ‘கு ற் ற ம ற் ற

9 ■

கற்பினையுடைய