பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அது பழச்சுவையென அமுதென

அதுபழச் சுவையென

அமுதென அறிதற்(கு) அரிதென எளிதென

அமரரும் அறியார்: இது அவன் திருவுரு,

இவன்.அவன் எனவே எங்களை ஆண்டுகொண்(டு)

இங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள் ளாய்! திருப்

பெருந்துறை மன்னா ! எதுஎமைப் பணிகொளும்

ஆ(று)?அது கேட்போம்; எம்பெரு மான்!பள்ளி எழுந்தரு ளாயே!

சென்ற திருப்பாட்டில் மாணிக்கவாசகர் வழிபாட்டின் சிறப்பினை உணர்த்தினார். தம்மை இறைவன் பிறப் பறுத்து ஆட்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளினை வினயமாக விடுத்தார். அது பழச்சுவையென’த் தொடங்கும் இத்திருப்பாட்டில் சிவானந்தானுபவம் இன்ன தன்மையது என்று விளக்க முற்படுவார், இறைவனை ‘மதுவளர் பொழில் திருவுத்தரகோச மங்கையுள்ளாய்” என்றார். தேன் ததும்பும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்து விளங்கும் திருவுத்தரகோச மங்கையெனும்