பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருவெம்பாவை விளக்கம்

அதுபோலவே சொல்லத் தகாத மொழிகளைச் சொல்லத் தகாத நேரத்தில் சொல்லத் தகாத இடத்திற் சொல்ல. லாமா? என்று கேட்டே விடுகிறாள் உறங்கி விழித்த தோழி. இதனைக் கேட்ட அளவில் எழுப்ப வந்த மகளிரும் மனம் அமைதி பெறுகின்றனர். தணிவான குரலில், மென்மையான சொற்களில், மேன்மையான கருத்துகளை எடுத்து அவள் முன் வைக்கின்றனர்.

தேவர்கள் தொழு தலைக் கண்டு நாணி அருளாத தாமரை மலர்போன்ற திருவடிகளையுடைய சிவ. பெருமான் தன்னை அன்புள்ளத்தோடு வணங்கும் அடியவர்க்கு எளிமையில் வந்து அருளுவான் என்ற பொருளில் விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன் என்கின்றனர். அறிவு ஒளி மிக்க வனாய் ஞானாசிரியனாகத் திகழ்பவன் ஆதலின் சிவன் தேசன் எனப் பெற்றான். செம்மையே ஆய சிவபதம் அளிக்கும் செல்வனாய், சிவலோக நாதனாய் அவன் கொலு வீற்றிருக்கிறான் ஆதலின் அவன் சிவலோக னானான். எல்லையில்லாத புகழ் நிறைந்த-சைவர்கள் கோயில் என்று சொன்ன அளவிலேயே தன்னைக் குறிப்ப தாய் இலங்கும் சிதம்பரத்தில் ஈசனாய் விளங்குகின்றான். அத்தகைய திருச் சிற்றம்பலத்தில் உறைகின்ற சிவனார்க்கு நாம் யாவரும் அன்புடையவர்கள் அல்லவா? என்று எழுப்பவந்த பெண்கள், உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த பெண்ணிடம் அவளை யும் தம்மோடு இணைத்துக் கொண்டு, அவள் சொன்னது போலவே, பாசம் பரஞ். சோதிக்கே உடையவள்’ என்பதனை ஏற்றுக் கொள்ளு முகத்தான் நல்லுரை நவின்ற காலையில் அவளும் வந்த வர்களோடு கூடி.

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் கின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாங் தொழவேண்டி