பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

முன்னைப் பழம்பொருட்கும்

முன்னைப் பழம்பொருளே!

பின்னைப் புதுமைக்கும்

பேர்த்தும்அப் பெற்றியனே!

உன்னைப் பிரானாகப்

பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம்

ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எங்கணவர்

ஆவார் அவர்உகந்து

சொன்ன பரிசே

தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இன்ன வகையே

எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும்

இலோம் ஏலோர் எம்பாவாய்!

உலகில் தோன்றிய எப்பொருளுக்கும் பருவநிலைகள் உண்டு; முடிவு நிலையும் உண்டு. இதனைப் பாளையாம் தன்மை, பாலனாம் தன்மை, காளையாம் தன்மை, காமுறும் இளமை, மேல் வரும் மூப்பு’’ என்றெல்லாம் குண்டலகேசியில் குறிப்பிட்டு நாளு நாள் நாம் சாகின்றாமல் நமக்கு நாம் அழாததென்னே’’ என்பார் அதன் ஆசிரியர் நாதகுத்தனார்.

ஆனால் சிவபெருமான் அவ்வாறில்லை. அவன் பிறப்பற்ற பிஞ்ஞகன். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதி. அவனுக்கும் தொடக்கமும் இல்லை;