பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி


ஆதியும் அந்தமும்

இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக்

கேட்டேயும் வாள்தடங்கண்

 மாதே! வளருதியோ?

வன்செவியோ நின்செவிதான்?

மாதேவன் வார்கழல்கள்

வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே

விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல்

நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள்

கிடந்தாள் என்னே! என்னே!

ஈதே எங்தோழி

பரிசேலோர் எம்பாவாய்!

உலகில் நாம் காணும் எப்பொருளுக்கும் தொடக்கம் என்பது ஒன்று உண்டு; அதேபோல் முடிவு என்பதும் ஒன்று உண்டு. தோற்றம் பெற்ற எப்பொருளும் இறுதி நிலைக்கு உட்பட்டதே. ஆனால் உலகில் உள்ள எண்ணற்ற கோடி உயிர்களைப் படைத்திருக்கும் இறைவனுக்குத் தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை. அவனை - அப்பரம்பொருளைச் சிவன் எனக் கண்டனர் நம் முன்னோர். 'சிவனெனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்’ என்று அப்பேரருட் பெரும் பிழம்பைப் போற்றினர். தமிழின் முதற்காப்பியமாம்