பக்கம்:திருவெம்பாவை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருவெம்பாவை

அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவி சொல்கிருள். நாசி இறைவனே வாழ்த்துகின்ற வாழ்த்தைக் கேட்டு எழுந்து விம்மி விம்மிக்கொண்டிருப்பாள். மெய்ம்மறந்து இருப்பாள். பூக்கள் துாவிய படுக்கையிலிருந்து புரண்டு இருப்பாள்" என்று சொல்கிருள்.

"பெண்ணே, புறப் பொருளைப் பார்ப்பதற்குரிய கூர்மை யும், பிறரால் கண்டு மகிழ்வதற்குரிய விசாலமும் உடைய கண்கள் உனக்கு இருக்கின்றனவே! நீ வாள் கடங்கண்ணி அல்லவா? அந்தக் கண்கள் இப்போது மூடி இருக்கின்றன. என்ருலும் கா துகளுக்குக் கதவு இல்லையே! நாங்கள் வீதியின் கடைசியிலிருந்து பாடும் பாட்டைக் கேட்டிருக்கலாமே! அப்படிக் கேட்க முடியாமல் உன்னுடை செவி வலிய செவியா?’ என்று கேட்கிருள்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும்

என்று சொல்கிருள். நீயும் வ ந் தி ரு ந் தால் காம் எல்லோரும் பாடலாம். இப்போது யாம் மட்டும் பாடு கின்ருேமே, இது முறையாகுமா?’ என்பதை யாம் என்ற சொல் குறிக்கிறது. -

வாள் தடங்கண் மாதே! என்று அழைக்கிருள். புறப் பொருளைக் காண்பதற்குரிய கூர்மையுடையது என்பதை வாள் என்பதும், தடங்கண் என்பது விசாலத்தையும் குறிப்பது. பிறர் கண்டு மகிழ்வதற் குரிய பரப்பை உடையது. நீ உறங்குகிருயோ, தூங்கு கிருயோ என்று சொல்கிருள்; அதை,

மாதே வளருதியோ?

என்று நாகரிகமாகப் பேசுகிருள். கண் உறங்குவதால் கண் பார்வை வலிமை பெறும். கண் ஒளி மிகும். குழந்தைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/11&oldid=579204" இலிருந்து மீள்விக்கப்பட்டது