பக்கம்:திருவெம்பாவை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாளா கிடத்தியால் 37

" உன்னைப் சொல்விப் பயன் இல்லை. உன்னை அணைத்திருக்கும் தூக்கம் அத்தனே வலியது என்பது தெரிகிறது’

என்னே துயிலின் பரிசு!

'துயிலின் தன்மைதான் என்ன ஆச்சரியம்! எங்களோடு சேராமல் உன்னை அனைத்துக்கொண்டிருக்கிறது” என்கிருள்

அன்னே இவையும் சிலவோ? பலஅமரர் உன்னற்கு அரியான், ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய் தென்ன என் முைன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் என்னை, என்.அரையன், இன்னமுதுஎன்று எல்லோமும் சொன்னுேம்கேள். வெவ்வேருய், இன்னம் துயிலுதியோ? வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்; என்னே துயிலின் பரிசு ஏலோர் எம்பாவாய். (7)

"தாய் போன்றவளே. நீ இவ்வாறு இருக்கும் செயல்கள் நீ செய்கின்றவற்றுள் சிலவோ? பல தேவர்கள் உன்னுவதற் கும் அரியவன் ஆகிய ஒருவன். பெரிய புகழை உடையவன் சிவபெருமானுடைய திருச்சின்னங்கள் கேட்க, சிவனே" என்று வாய் திறந்து முழங்குவாயே! இராகத்தைப் பாடு வதற்கு முன் தென்ன என்று தொடங்குவதற்கு முன்பு தீயில் சேர்ந்த மெழுகு ஒதது உருகுவாயே! இப்போது நாங்கள் எல்லோரும் என் ஆனே, என் அரையன், இன்னமுது என்று சொன்ளுேமே, கேள். வெவ்வேருகவும் சொன்ைேம்.இன்னும் துயில்கிருயே! வலிய நெஞ்சுடைய பேதையர் போலச் சும்மா கிடக்கிருயே! தூக்கத்தின் தன்மைதான் என்ன வலியது !

தம்மைவிடச் சிறிது பெரியவள், மூத்தவள் ஆதலின் அன்னே என்று விளக்கிருள். நீ செய்கின்ற காரியங்கள் இவையும் பக்தர்களுக்கு உகந்தன ஆகுமோ?" என்னும் பொருளில் "இவையும் சிலவோ' என்று கேட்கிருள். :முன்பெல்லாம் இறைவனுடைய திருச்சின்னம் வாயிலில் கேட்ட அளவிலே 'சிவனே' என்று வாய் திறந்து கூவுவாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/38&oldid=579231" இலிருந்து மீள்விக்கப்பட்டது