பக்கம்:திருவெம்பாவை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருவெம்பாவை

எங்களுக்கு அவ்வாறு அருள் செய்வாயாக எங்களுக்கு வேறு குறையும் இல்லாமல் இருக்கும்.

'உலகத்திலுள்ள பொருள்களால் வருகின்ற திருப்தி மிகவும் அற்பமானது. ஆகவே இவை எல்லாம் அழிந்து போகும். ஆனல் உனனுடைய திருவருள் எல்லாக் காலத்தும் நின்று எங்களுடைய பிணிகளை எல்லாம் போக்கி எங்களுக்கு நல்வாழ்வு தரும். ஆகையால் நாங்கள் சொன்னபடி நீ எங்களுக்கு அருள் செய்யவேண்டும்.’’

இன்ன வகையே எமக்குஎம்கோன் கல்குதியேல் என்ன குறையும் இலோம்.

உலகம் தோன்றியது எப்போது என்று யாருக்கும் தெரியாது. அப்படித் தெரிந்த பொருள்களுள் மிகவும் பழைய பொருள் இது என்று ஒருவர் ஒன்றைச் சுட்டிக் காட்டினராளுல் அதற்கு முன்பாக ஆண்டவன் இருக் கிருன். அந்தப் பொருளைப் படைத் தவனே அவன்தானே? படைக்கப்பட்ட பொருளுக்கும் முன்பே படைப்பவன் இருக்கத்தானே வேண்டும்? ஆகையால்,

முன்னைப் பழம்பொருட்கும் முன்னே ப் பழம்பொருளே !

என்கிருர்கள். பல புதிய நிகழ்ச்சிகள் எல்லாம் நாளுக்கு நாள் வருகின்றன. பழமையில் ஊறியவர்களுக்கு அவைகள் புதுமையாகத் தோன்றுகின்றன. இந்தப் புதுமைகள் நாளுக்கு நாள் வெவ்வேருக வருகின்றன. பின்னும் பின்னும் புதுமைகள் வரவர அந்தப் புதிய பொருள்களுக்கு அப்பாலும் புதிய பொருளாக இறைவன் இருக்கிருள்.

பின்னப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!.

- முன்னேப் பழம்பொருள் என்று சொன்னுளாதலின் பின்னப் புதுமை என்று சொல்கிருள். எல்லாக் காலத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/47&oldid=579240" இலிருந்து மீள்விக்கப்பட்டது