பக்கம்:திருவெம்பாவை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - திருவெம்பாவை

வார்கள். கதிரவன் ஒரே மாதிரி வெயில் வீசினலும் குளிர் காய்கிறவர்கள் காய்வதும் புழு மாய்வதும் போன்றது இது.

"உன்னுடைய அன்பின் வலிமையால் பல பேர் பல வகையில் உய்ந்திருக்கிருர்கள், உன்பால் அன்புடைமையில்ை அவ்வாறு உய்ந்தவர்களைப் பற்றியெல்லாம் நாங்கள் உசாவி அறிந்திருக்கிருேம். அவர்கள் எவ்வெவ்வாறு உய்ந்தார்களோ அப்படியெல்லாம் நாங்களும் உய்ந்துவிட்டோம்’ என் கிருர் கள்: ஐயா, நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின், உய்வார் கள் உய்யும்படியெல்லாம் உய்ந்தொழிந்தோம்'; .னக்கு இது விளையாட்டாக இருந்தாலும் எங்களுக்குப் பெறுதற்கரிய பெரும் பேருக விளைந்தது’ என்ற கருத்துப்படச் சொல் கிருள். -

பெரும் பொருளை மடியில் வைத்திருக்கிறவன் தக்க பாதுகாப்புடன் சென்ருலும் ஒரு கால் தவறிவிடுமோ என்று ஐயப்படுவதுபோல, எம்பெருமானே, மறவாமல் எங்களைப் பாதுகாத்தருள வேண்டும்' என்கிருர்கள். உய்ந்தொழிந் தேர்ம்' என்று சொன்னலும், பெற்றது நழுவாமல் இருக்க வேண்டுமே என்ற அச்சத்தால் இவ்வாறு சொல்கிரு.ர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/59&oldid=579252" இலிருந்து மீள்விக்கப்பட்டது