பக்கம்:திருவெம்பாவை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருவெம்பாவை

அவர்கள் கை நிறைய வளையல்கள் அணிந்திருக்கிருர்கள். சங்காலான வளையல்கள் அவை. அவர்கள் பொய்கையில் பாயும்போது அவைகள் ஒலிக்கின்றன.

  • x கம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப. கையிலுள்ள சங்கு வளையல்கள் ஒலிக்கவும், காவில் உள்ள சிலம்புகள் அந்த ஒலியோடு சேர்ந்து ஒவிக்கின்றன.

. எல்லோரும் இளமை உடையவர்கள் ஆதலின் அவர்கள் நீராடும்போது அவர்களது தனங்கள் பூரிப்பு உடையன வாகத் தோன்றுகின்றன.

கொங்கைகள் பொங்க.

கூட்டமாகச் சேர்ந்து நீராடுவதால் அவர்கள் மூழ்கி எழுந்த இடம் புனல் பொங்கிற்ைபோலப் பெருகுகிறது.

புனல் பொங்க.

அவர்கள் பாயும் மடுவில் தாமரைப் பூக்கள் பூத்திருக் கின்றன. அவற்றிலே பாய்ந்து ஆடுவோம்’ என்று சொல் கிரு.ர்கள். - -

பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

அன்பு உடையவர்களுக்கு எதைப் பார்த்தாலும் இறைவனுடைய நினைவு வரும். ஆதலால் அந்த மடுவைப்

பார்த்து இறைவியையும், இறைவனையும் நினைவு கூர் கிரு.ர்கள். r -

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வங்து சார்தலிளுல்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றுஇசைந்து பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துகம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் (13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/67&oldid=579260" இலிருந்து மீள்விக்கப்பட்டது