பக்கம்:திருவெம்பாவை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருவெம்பாவை

வேதத்திலுள்ள பல பொருள்களைச் சொல்லிப் பாடு கிரு.ர்கள்.

வேதப் பொருள்பாடி.

அந்தப் பொருளே இறைவகை இருக்கிறது என்பதை தினேவு கூர்ந்து அதனைச் சொல்லிப் பாடுகிரு.ர்கள்.

வேதப் பொருள் பாடி அப்பொருளா மாபாடி, சோதி வடிவினனுகிய எம்பெருமானின் பலவகை அருள் திறத்தையும் பாடுகிரு.ர்கள்.

சோதி திறம்பாடி,

அவன் தன் திருமுடியில் சுற்றியிருக்கும் கொன்றை மலரைப் பாடுகிருர்கள். சிவபெருமானின் அடையாள மாலை கொன்றை. - -

சூழ்கொன்ை றத் தார்பாடி.

"எல்லாப் பொருளுக்கும் முதல்வகை நிற்கிறவன் அவன். எல்லாம் மறைந்தாலும் தான் மறையாமல் இறுதி யில் நிற்கிறவனும் அவன். இந்தத் தன்மைகளே எல்லாம் நாம் பாடுவோம்.’’ -

ஆதி திறம்பாடி, அந்தம்ஆ DTurq. -

இறைவியையும் பாடுவோம் என்று சொல்கிருள். இறைவிதான் உலகத்திலுள்ள மக்களை எல்லாம் பெற்று எடுத்தவள். அவரவர்களுடைய இயல்புக்கேற்ப மக்கள் வளர்கிருர்கள். இந்தப் பேதம் அவர்கள் முன் செய்த வினே யில்ை வந்தது. அதற்கேற்ப வேற்றுமை உண்டாகும்படி: தம்மை வளர்த்து எடுக்கிருள், எம்பெருமாட்டி. அவள் கை நிறைய வளையலை அணிந்திருக்கிருள். "அவளுடைய பாதார விந்தத்தைப் பாடி நாம் நீராடுவோமாக." .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/69&oldid=579262" இலிருந்து மீள்விக்கப்பட்டது