பக்கம்:திருவெம்பாவை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்கழி நீர் ஆடுவோம் 95 .

யில் rುಖT உயிர்களும் அடங்கி விடு கின்றன. சிருஷ்டி செய்யும்போது அவைகள் அங்கிருந்து தோற்றம் பெறு கின்றன.

உலகத்தில் பல வகையான போகங்களே மக்கள் அனுபவிக் கிரு.ர்கள். அந்தப் போகங்களுக்கு எல்லாம் கார்னமாக இருப்பது அவனுடைய திருவடிகளே. ஆதலின், "எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்' என்கிருள்.உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் அழிந்து போவன. உயிர்கள் எல்லாம் இறைவனது திருவடியைச் சார்ந்து விடுகின்றன. அவை எல்லாம் போய்ச் சாரும் இடம் அவன் திருவடிகள் ஆதலின்,"எல்லா உயிர்க்கும்.ஈரும் இணையடிகள்' என்கிருள். அவனுடைய தாமரையைப் போன்ற பாதங்கள் திருமாலா லும் நான்முககுலும் காணப்படாதவை. ஆதலின், 'மால் நான்முகனும் காளுத புண்டரிகம்’ என்கிருள். -

"இத்தகைய சிறப்புடைய பொன் மலர் போன்ற பாதங்கள் நாங்கள் பெறும் பேறு கொண்டு உய்யும்படி ஆட்கொண்டன. யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள் என்கிருள். இத்தகைய திருவடிகளைப் போற்றி மார்கழி மாதத்தில் நீராடுவோமாக என்கிருள். -

இந்தப் பாடலில் ஆதியாம் பாதமவர் என்றும், அந்தமாம் செந்தளிர்கள் என்றும், தோற்றமாம் பொற் பாதம் என்றும், போகமாம் பூங்கழல்கள் என்றும், ஈரும் இணையடிகள் என்றும், காணுத புண்டரிகம் என்றும் இறைவன் செய்யும் ஐந்கொழில்களையும் குறிப்பித்தாள். இறைவனுடைய பெருமையைப் பாடி நாம் மார்கழி மாதத்தில் நீராடுவோமாக என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/96&oldid=579289" இலிருந்து மீள்விக்கப்பட்டது