பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


90 குச் செல்லும் அடியார்கள் வாய்கொப்பளித்துக் கைகால் களே நீரால் தூய்மை செய்து கொண்டு மலர்களை எடுத்துப் போவது வழக்கமாகும். திருமலையிலுள்ள ஆண்யான யொன்று இந் நெ றி யை மேற்கொள்ளு கின்றது. இக்காட்சியினை ஆழ்வார். “புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து அருவி உகுமதத்தால் கால்கழுவிக் கையால்-மிகுமதத்தேன் விண்ட மலர்கொண்டு விறல்வேங் கடவனையே கண்டு வணங்கும் களிறு.' (புகு-வாயில் புகும்; வாய்பூசுதல் - கொப்பளித்தல்; மிகுமதம்-அதிக மதம்; விறல்-மிடுக்கு; களிறு-ஆண் யானை.) என்ற பாடலால் காட்டுவர். கன்னத்திலிருந்தும் மத்த கத்திலிருந்தும் பெருகியொழுகும் மதநீரால் வாய் கொப்பளிக்கின்றது யானை. அருவிபோல் கால்வரை பெருகிவழியும் மதநீரினல் கால் கழுவுகின்றது. இங்ங்னம் திருமலையிலுள்ள ஐயறிவு விலங்கும் தன்னை வழிபடும் ஞானத்தைத் தரக்கூடியவன் திருமலையப்பன் என்பது ஆழ்வார் நமக்கு உணர்த்தும் செய்தியாகும். இன்னொரு யானையின் செயலையும் அதன் முடிவை யும் காண்போம். மதயானைபோல் எழுந்த மாமுகில் காள்' என்று ஆண்டாள் வருணித்ததை நாம் நினைவு கொள்ளுவோம். ஆண்யான யொன்று கரிய மாமுகிற் படலத்தை எதிரியானயென்று நினைத்து துதிக்கையைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஒடிக் குத்துகின்றது. இதனைக் கண்ட யாளி ஒன்று அந்த யானையின்மீது பாய்ந்து ஓங்கி அறைந்து அதன் கொம்புகளே முறிக் . ------ مهم میسیسیم 51. முன்-திருவற் 10,