பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


$3 'தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி அளிந்த கடுவனையே நோக்கி-விளங்கிய வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே” (சிலா தலம் கற்பாறை; மந்தி - பெண் குரங்கு, கடுவன் ஆண் குரங்கு; மதியம்-திங்கள்.) என்பது பேயாழ்வாரின் சொல்லோவியம். இப்பாடலால் திருமலையின் உயர்ச்சியை அறிகின்ருேம். இங்கனம் திரு மலையின் விண்ணை எட்டும் உயர்வினைக் காட்டும் பல பாக்கள் திருவேங்கடமலையின்மீது எழுந்த தனி இலக்கி யங்களில் உள்ளன. அவற்றை நாளைச் சொற்பொழிவில் காட்டுவேன். திருமழிசையாழ்வார் : திருவேங்கட மலையைப்பற்றிய பக்திசாரரின் அது சந்தானம் மிகவும் அற்புதமானது. "வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி கிற்கின்றேன் கின்று நினைக்கின்றேன்" (வெற்பு-மலை; வீடு-மோட்சம்) என்கின்ருர். “பல மலைகளின் பெயர்களைச் சொல்லி வரும் அடைவிலே 'திருவேங்கடமலை என்று என் வாயில் வந்து விட்டது. இதல்ை பரமபதமும் எனக்குச் சித்தித்து வந்துவிட்டது” என்று கூறி இனியராகின்ருர் ஆழ்வார். இந்த அநுபவத்தைக் கைமேல் கண்டவர் நம்மையும் அம்மலையைச் சென்று வணங்குமாறு ஆற்றுப் படுத்துகின்ருர். - 68. மூன்-திருவந். 58. 69. நான்-திருவந். 40,