பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


ÍÜ தமிழ்ச் சுவையும் ஈத்துவக்கும் இன்பமும் ஒருங்கே நிறைந்த இவரிடமிருந்து கருணை வெள்ளம் பல்வேறு துறைகளில் இவர் மேற்கொண்ட சமூக நலத் திட்டங்களில் பாய்ந்து செல்கின்றது. பிச்சைக்காரர்கள், கன்னிழந்தோர், உடல் ஊனமுற்ருேர், ரிக்ஷா வண்டிக்காரர்கள், சாலையோரம் வாழ் ஏழை மக்கள் ஆகியோர் இவர் கருணையின் பலனைத் துய்த்து இவரை வாழ்த்துகின்றனர். இவர் ஆட்சியில் தமிழும் திருக்குறளும் ஏற்றமான உரிய இடங்களைப் பெற்றன: தமிழாசிரியர்களின் நிலையும் உயர்ந்தது. இவரது ஆட்சிக்காலத்தில்தான், இவருடைய கடைக்கண் பார்வை யினுல்திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை எம். ஏ. பி எச். டி. அளவில் விரிந்து பெருகிச் செழிப் புடன் வளர்த்து வருகின்றது. கருளுதிதியாகிய இவரது கருணை என்றுமே இத்துறைபால் உண்டு என்ற நம்பிக்கை நிலையாகவே என்னிடம் உளது. தமிழகத்தின் எல்லையாகத் திகழும் வட மாலவன் குன்றத்திற்கும் தமிழுக்கும் உள்ள உறவினைக் காட்டும் இந்நூலே, அவரது 52-வது அகவை நிறைவின் நினைவாக அன்புப் படையலாக்கிப் பெருமிதம் கொள்ளுகின்றேன். இந்த மூன்று பொழிவுகளையும் நூல்வடிவில் என் பொறுப்பில் வெளியிட்டுக் கொள்ள இசைவுதந்த சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தாமரைச் செல்வர் கெ. து. சுந்தர வடிவேலு அவர்கட்கும், இந்தத் தொடர் சொற் பொழிவுகளே ஆற்றவும், அப்பொழிவுகள் அச்சுவடிவம் பெறவும் இசைவுதந்த திருவேங்கடவன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் D. சகங்காத ரெட்டி அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது. - காலத்திற்கேற்ற பல அரிய இன்றியமையாத உயர்ந்த தமிழ் நூல்களே வெளியிட்டுப் பெரும் புகழ்பெற்ற பாரி நிகலய உரிமையாளர் திரு. க. அ. செல்லப்பன் அவர்கட்கும், இந்த நூலை விரைவில் அழகுற அச்சிட்டுக் கற்போர் கரங்