பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110


f10 னுடைய காக்கும் தொழிலை மறந்ததோடன்றி ஒரு பெண் பிள்ளையையும் கொலை செய்தான் என்ற கருத்து உலகில் பரவு மாகில் பின்னர் அவனே மதிப்பார் உண்டோ? என்று அவன்மீது கழிபேரிரக்கமும் கொள் கின்ருள். இங்ங்னம் ஆண்டாளம்மையார் வேங்கட வாணன்மீது தூது விடுவதாக அமைந்த திருமொழியில் ஆழங்கால் பட்டு அகமகிழ்கின்ருேம். திருமங்கையாழ்வார். திருமங்கையாழ்வார் திருவேங்கடத்தை நான்கு திருமொழிகளால்" மங்களாசாசனம் செய்துள்ளதை அறிகின்ருேம். திருவேங்கடமலையின் இயற்கைக் காட்சி களில் இந்த ஆழ்வாரும் மிகவும் ஆழங்கால் பட்டுப் பேசு வதை இவர்தம் பாசுரங்களால் அறிகின்ருேம். புண்ணிய தீர்த்தங்களாலும் பெரிய சோலைகளாலும் சூழப்பட்டது திருவேங்கடம் என்பதை, "தீர்த்தம் நீர்த் தடம் சோலே சூழ் திருவேங்கடம்" என்றும், சேரும் வார் பொழில்சூழ் திருவேங்கடம்' என்றும், 'வாச மாமலர் நாறு வார்பொழில் சூழ்தரும் உலகுக்கெலாம் தேசமாய்த் திகழும் மலைத்திரு வேங்கடம்' என்றும் கூறுவதைக் காணலாம். மேலும் :வேய் ஏய் பூம்பொழில் சூழ் விசைஆர் திருவேங்கடம், 'கரி 104. பெரிய திரு. 1. 8; 1.9; 1.10, 2.1. 105. பெரிய திரு. 1-8:4. 106. பெரிய திரு. 1.8:1. 107. பெரிய திரு. 1-8:9 108, பெரிய திரு. 1-9:1.