பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112


112 அறியலாம். இங்ங்ணம் இந்த ஆழ்வார் சொற்ருெடர்க ளால் கூறுவனவற்றைப் பிற்காலத்தில் எழுந்த சிற்றிலக் கியங்கள் தனித் தனிப் பாடல்களாக வருணித்துக் காட்டுவனவாகவுள்ளன என்பதை அடுத்த பொழிவில் காட்டுவேன். இத்தகைய உயர்ச்சியினை உடைய வேங் கடத்தில் கானவர் இடும் கார் அகில் புகை உயர்ந்து பரவுகின்றது.' வஞ்சிக் கொடி போன்ற இடையை யுடைய குறப் பெண்கள் தினைப் புனங்களைக் காவல் புரிந்து வருகின்றதாகக் காட்டுவர் இந்த ஆழ்வார்." இயற்கை எழில்களே ஆங்காங்குத் தம் பாடல்களில் சுட்டியுரைத்த ஆழ்வார் அத் திருமலையில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானப் பலவாறு போற்றியுரைக் கின்ருர். எம்பெருமான் பல்வேறு அவதாரங்கள் எடுத்து மக்களுக்காகச் செய்த பல செயல்களே எடுத்துக் காட்டி அகமகிழ்கின்ருர். திருவேங்கடநாதன் குருந்தம் ஒசித்த கோபாலகை வந்தவர்; கொக்கின் வடிவமாக வந்த பகாசுரனை வாய் பிளந்து வானுலகத்திற்கு அனுப்பிய வித்தகர்; கன்னெஞ்சத்தையுடைய யூதனை யிடம் பாலமுதம் பருகியதுடன் அவள் உயிரையே குடித்த அற்புதச் செயலேயுடையவர்: கிருதயுகத்தில் வெண்ணிறத்தையும், கலியுகத்தில் கருமை நிறத்தையும், துவாபரயுகத்தில் நீலமணி நிறத்தையும் கொண்டிருப் பவர்.' கண்ணகை இருக்கும்பொழுது மருதிடை தவழ்ந்து நளகூபரமணிக்ரீவர்களின் சாபத்தை நீக்கிய பெருமையுடையவர். குன்றமேந்திக் குளிர் மழைகாத்து 121. பெரி. திரு. 2.1:1 122. பெரி. திரு. 2.1:2 123. பெரி. திரு. 1-8:1 124. பெரி. திரு. 1:8:2