பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113


113 ஆநிரைகளின் துன்பத்தைப் போக்கியவர்." பார்த்த னுக்குச் சாரதியாக நின்று தேரோட்டியவர்; ஆயர்பாடி யில் கோபியருடன் குரவை கோத்து ஆடிய கோவலர்." மாணியாய்ச் சென்று மண் இரந்து கொண்டவர்; இராமனுக நின்று மராமரங்கள் ஏழையும் ஒரம்பிளுல் எய்த அற்புதச் செயலையுடையவர்." பாலணுய் ஏழுல குண்டு ஆலிலையில் துயின்றவர். திண்திறல் அரியாகி ஒண்திறல் அவுணன் உயிர்குடித்த திறலுடையவர்.' பஞ்ச பூதங்களின் வடிவாக நின்று பேராயிரம் கொண்ட பெம்மான்.'" - எம்பெருமான் திறத்தை எடுத்துரைத்த ஆழ்வார் தன் குற்றங்களேயெல்லாம் விரித்துக் கூறித் தன்னை ஆட் கொள்ளுமாறு வேண்டிச் சரண் புகுகின்ருர். 'எம்பெரு மானே, உறவினரல்லாதாரை உறவினர்கள் என்று நம்பிக் கெட்டொழிந்தேன்." அநுபவிக்கத் தகாத வற்றை அதுபவித்த' எண்ணற்ற பாவங்களைச் செய்தேன். பல உயிர்களைக் கொன்று பலவகைப் பாவங் களைப் பண்ணினேன்.' எண்ணற்ற யோனிகளில் பிறந்து இளேத்தேன்; ஒருவிதமான நற்செயல் களையும் புரி ந் தே ன் இலேன்.' பஞ்ச பூதங்களான யாக்கையில் புகுந்து புலம்பித் தளர்ந்தொழிந்தேன், 125. பெரி. திரு. 1-8:3 126. பெரி. திரு. 1.8:4 121. பெரி. திரு. 1-8:5 128. பெரி. திரு. 1-8:6 129. பெரி. திரு. 1-8:7 130. பெரி. திரு. 1.9:1 131. பெரி. திரு. 19:2 132. பெரி. திரு. 1.9:3 133. பெரி. திரு. 1-9:4, 5 134. பெரி. திரு. 1.9;6 வே,-8