பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


##9 "இவ்விடத்தில் அகில் புகை என்ருவது, கருமுகைப் பூ என்ருவது சிறப்பித்துச் சொல்லாமையாலே ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் எம்பெருமானுக்கு அமையும். செதுகையிட்டும் புகைக்கலாம், கண்ட காலிப் பூவும் சூட்டலாம்” என்று கூறிஞராம். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நஞ்சீயர் கண்ட காலிப் பூவை எம்பெருமானுக்குச் சாத்தலாகாது என்று சாத்திரம் மறுத்திருக்க இப்படி அருளிச் செய்யலாமோ?” என்று வினவினராம். அதற்கு பட்டர் அருளிச் செய்த சுவையான மறுமொழி: 'சாத்திரம் மறுத்தது. மெய்தான்; கண்ட காலிப்பூ எம்பெருமானுக்கு ஆகாதென்று மறுக்க வில்லை; அடியார்கள் அப் பூவைப் பறித்தால் முள் பாயுமே என்று, பக்தர்கள் பக்கல் தயையினுல் சாத்திரம் அதனை நீக்கினதேயன்றி எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவுமில்லே ' என்பது. 'உறவோடும் வானிடைக் கொண்டு போயினவும் அது கண்டு என்ற அடியின் பொருளிலும் கருத்து மாறு பாடு உண்டு. அதனையும் ஈண்டுக் காட்ட விரும்புகின் றேன். ஒருவர் இறைவனுக்கு வழிபாட்டு முறையைக் கையாண்டால் அவருக்கும் அவருடன் சம்பந்தம் பெற்றவர்கட்கும் அதன் பயன் உண்டென்றலும் அவருடைய வாழ்நாள் காலத்தில் சம்பந்தம் பெற்றவர் கட்கு அது கிட்டுமேயன்றி அவருக்குப் பின்வந்தோருக்கு. அது கிட்டும் என்று சொல்ல முடியாது என்பர் ஒரு சாரார்; அனைவருக்கும் உண்டு என்று அறுதியிடுவர் வைணவ சித்தாந்திகள், சுவாமிதேசிகன் நியாஸ்திலகம்’ என்னும் வடமொழி தோத்திரத்தில் இந்த சித்தாந் தத்தை வெளியிட்டருளியுள்ளார். இதில் அவர் மூன்று சான்றுகள் தருகின்ருர், குருடன் கண் தெரிந்த வனுடைய கையைப் பிடித்துக் கொண்டு போவது