பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


ÍŽÍ டம், 'எழில் கொள் சோதி', 'திலகம் உலகுக்கு ஆய்நின்ற திருவேங்கடம்' என்ற தொடர்களால் ஈடுபட்டுப் பேசுவதைக் காணலாம். ' திருவேங்கட மாமலை, ஒன்றுமே தொழ நம்வினை ஒயுமே ' என்று அந்த மலையின் பெருமையிலும் அவர் ஆழங்கால் பட்டுப் பேசுவதைக் காணலாம். திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே இந்த ஆழ்வாருக்குத் தாள் பரப்பி மண்தாவிய ஈசனுக'வும் எண்கண், பாசம் வைத்த பரம் சுடராக" வும் 'வேதியர் முழுவேதத்து அமுதம்" ஆகவும் காட்சி அளித்து அவர் உள்ளத்தைக் கொள்ளே கொள்ளுகின்ருன். திருமங்கையாழ்வார் திருவேங்கட முடையானிடம் சரண் புகுந்ததை மேலே காட்டினேன். நம்மாழ்வார் சரண் புகுந்ததை ஈண்டுக் காண்போம். 'அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உரைமார்பா' நிகரில் புகழாய் உலகம்மூன்று உடையாய் என்னை ஆள்வானே! கிகளில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல்ஒன்(று) இல்லா அடியேன்உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' 150. திருவாய், 3-3:3 151. திருவாய். 3-3:8 152. திருவாய். 6-10.1 153. திருவாய், 3.3:8. 154. திருவாய். 3-3.11 155. திருவாய். 3-3:4 156. திருவாய். 3-3:5 157, திருவாய். 6.6:10