பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126


126 இது திருமாலவன் கவி' என்றும் சிறப்பிக்கப் பெறும். இந்நூலில் நம்மாழ்வார் பகவான நூறு பதிகங்களால் அதுபவித்து இனியராகின்ருர். இவற்றுள் 73 பதிகங்கள் ஆழ்வார் தாமான தன்மையில் பேசியவை, 27 பதிகங்கள் பெண்பாவனையில் நின்று பேசியவை. பெண் நிலையிலிருந்து பேசியவற்றுள் மகள் பாவனையில் பேசினவை 17 பதிகங்கள்; தாய் பாவனையில் பேசினவை 7 பதிகங்கள்; தோழி பாவனையில் பேசியவை 3 பதிகங்கள். இங்ங்ணம் மூன்று நிலைகளாக வடி வெடுக்கும் பாசுரங்கட்கு ஆசாரிய ஹிருதயம்' என்னும் நூல் தத்துவம் குறிப்பிடுகின்றது." இந்த மூன்று நிலேகளேயும் மூன்று பிரஜ்ஞாவஸ்தைகள்' என்று விளக்கமும் தருகின்றது. அந்த விளக்கங்களை ஈண்டுக் குறிப்பிடுவது பொருத்தமே யாகும், - வைணவ முறைப்படி மோட்சத்தை அடைய விரும்பு பவர்கள் (முமுட்சுகள்) தெரிந்துகொள்ள வேண்டிய "இரகசியங்கள்' மூன்று. அவை திருமந்திரம், துவயம், சரம சுலோகம் என்பனவாகும். ஆன்மாவின் உண்மைச் சொருபம் இன்னதென்பதையும், அந்நிலைக்கேற்பச் சேதநன் விடவேண்டுவன. இவை என்பதையும், பற்ற வேண்டுவன இவை என்பதையும் தெரிவிப்பது திருமந் திரமாகும். இது தன்னை மனனம் செய்கின்றவருக்கு இரட்சகமாயிருத்தலின் மந்திரம்’ எனப் பெயர் 164 திருவிருத்தம்-48. - 163. ஆசாரிய ஹிருதயம்-சூத்திரம், i 13. 166. பிரஜ்ஞாவஸ்தை-மூன்று காலத்தையும் அறியும் அறிவின் நிலை; அவஸ்தை-நிலை. 167. இவற்றின் பெருமையை உணராதார் காதில் விழாதவாறு மறைக்கப்பெறுவதால் இவை இரகசியங்கள்’ எனப்பட்டன. - - - - - -