பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சங்ககால வேங்கடம்’ முதற் பொழிவு மார்ச்சு 7, 1974 பேரன்பர்களே, வணக்கம். சில ஆண்டுகட்கு முன்னே நம்மிடையே வாழ்ந்தவர் சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப் பிள்ளை யவர்கள். கற்றவர்க்கு இனியராகவும் மற்றவர்க்குப் பெருமையுடையவராகவும் எல்லோர்க்கும் நல்லவராக வாழ்ந்து இப் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து இருபத் தைந்து ஆண்டுகட்குமேல் தமிழ்ப் பணியாற்றியவர், இன்று நம் எல்லோர் சிந்தையிலும் வீற்றிருக்கும் பெருமகளுர் சேதுப் பிள்ளையவர்கள். இப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக (Professor of Tamil) அணி செய்த பெருமை இவரைச் சாரும். லாஸ்ரஸ் பெருமாட்டி அவர்கள் அளித்த நன்கொடை யால் அவர்கள் தந்தையார் பெயரால் லாஸ்ரஸ் தமிழ்ப் பேராசிரியர் என்ற பதவியை முதல் முதலாக ஏற்ற பேறு நம் சொல்லின் செல்வர்க்கே உரியது. அன்னரது பணியினை நினைவூட்டும் வண்ணம் ஏற்படுத்தப் பெற்ற வெள்ளிவிழா அறக்கட்டளையின்கீழ் இந்த ஆண்டிற்கு (1973-74) உரிய சொற்பொழிவுகள் ஆற்றும்படி பணித்த பல்கலைக் கழகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள் கின்றேன் ஊரும் பேரும் என்ற ஆராய்ச்சி நூல் வெளியிட்ட டாக்டர் பிள்ளையவர்கட்கு உகப்பான இடம் திருவேங்கடம் என்ற திவ்விய தேசம் ஆகும். வேங்,-1