பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130


#33 பெருமையை நினைந்து மகிழ்பவள் இவள். எம்பெருமான் சாத்தியோபாயமாக இருந்தால் தான் செ ய் யு ம் சாதனங்கள் முடிவுற்ற பிறகே சாத்தியமாகின்ற பேறு கிடைக்கக் கூடும் என்று பொறுத்திருக்கலாம். ஆனல் அவன் சித்தோபாயமாக இருப்பவன். அதனல் அவனைத் தாமதித்து அநுபவிப்பதற்குக் காரணம் இல்லை : "அவனே உபாயம் என்ற கோட்பாட்டையும் மீதறித் தான் நினைத்த பேற்றினை உடனே பெறவேண்டும் என்ற பதற்றத்தை உடையவளாக இருக்கின்ருள் இவள். இந்த மனநிலைதான் மகள் (தலைவி) என்று குறிப்பிடப் பெறு கின்றது. திருவாய்மொழியில் மகள் பாவனையில் பேசும் பதினேழு பதிகங்களும் இந்த நிலையினையே குறிக்கின்றன என்பதைப் இந்தப் பதிகங்களை ஊன்றிப் படிப்பதளுல் அறியலாம். இந்த மூன்று நிலைகளும் (அவஸ்தைகளும்) நம்மாழ் வாருக்கு எல்லாக் காலங்களிலும் இருந்தன. இதல்ை தான் இவை ஞானவஸ்தைகள்’ (ஞான நிலைகள்) என்று கூறப்பெருமல் பிரஜ்ஞாவஸ்தைகள் (உணர்வுநிலைகள்) என்று குறிப்பிடப் பெற்றுள்ளன என்பது அறிந்து உணரத்தக்கது. இங் என ம் திருவெட்டெழுத்தின் (திருமந்திரத்தின்) மூன்று சொற்களாலும் குறிப்பிடப் பெறும் பொருளைப் பற்றிய ஞானம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தே இருக்கும் என்பதை உணர்த்தவே இவ்வாறு குறிப்பிடப்பெற்றது என்பதையும் சிந்தித்து அறிதல்வேண்டும். வேதாந்தங்களில் குறிப்பிடப்பெறும் பக்தி இங்க னம் ஆழ்வார்களிடம் காதல் முறையில் பரிணமித்து நிற்பதை அறிகின்ருேம். இவர்கள் எம்பெருமான்மீது கொள்ளும் காமம் பகவத் விஷய காமம்’ என்று வழங் தப்பெறும். இங்கனம் இவர்கள் மாதவன் மீது