பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134


134 அறத்தொடுநிலை தோழியும் தலைமகளும் அறத்தொடு பொருந்தவே நடந்திருப்பதாகக் காட்டி நிற்றலே அறத்தொடுநிலை என்பது. குட்டநாட்டுத் திருப்புலியூர் எம்பெருமான்மீது நம்மாழ்வார் அருளியுள்ள பதிகம் தோழி பாசுரமாக நடைபெறுகின்றது. பராங்குச நாயகி வயது முதிர்ந்து மங்கைப் பருவம் அடைகின்ருள். கணவனை நாடி அடையவேண்டிய வயதல்லவா இது? திருப்புலியூர் எம்பெருமானுடன் இயற்கைப்புணர்ச்சியும் நடைபெற்று விடுகின்றது. த லே வி யி ன் உயிர்த் தோழியானவள் தலைவியின் உருவ வேறுபாட்டாலும் சொற்களின் வேறுபாட்டாலும் புணர்ச்சி உண் டானமையை ஒருவாறு அறிகின்ருள். தன் மகளின் உண்மை நிலையை அறியாத தாய் தந்தையர் இவளுடைய திருமணத்தை நிச்சயித்து மண முரசும் அறைவிக்கின்றனர். இதனை அறிந்த தோழி மனங் கவல்கின்ருள். பரதனே அரசன் என்று அறைவித்த முரசொவி செவிப்பட்டபோது பரதாழ்வான் எங்ங்னம் மனக் கிலேசம் அடைந்தானே அங்ங்னமே தோழி இப்போது துயர் அடைகின்ருள். அவள் இவ்வாறு சிந்திக் கின்ருள் : "மானிடவர்க்கென்று ேப ச் சு ப் ப டி ல், வாழகில்லேன்' என்று கூறியவள் இவள். அன்றிப் பின் மற்ருெருவர்க் கென்னை பேசலொட்டேன் மாலிருஞ் சோலேயெம்மாயற்கல்லால்க்' என்ற பிடிவாதத்தைப் பிடிக்கின்றவள். மாருக ஏதேனும் நடைபெற்ருல் இவள் உயிர் தரியாள். அப்படி நடைபெறுவதை எப்படி யாயினும் தடுத்தேயாக வேண்டும். அங்ங்ணம் செய்ய முயலுங்கால் திருப்புலியூர் நாயனருடன் புணர்ச்சி உண்டானமையை அறிவிப்பின் அஃது என் காவற் 180, நாச். திரு. 1:5 181.