பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142


#42 வுறுத்துகின்றன். அம்மலை மிக்க தூய்மையுள்ளதாதல் பற்றி இராவணன் அங்குச் சென்றிருக்கமாட்டான் என்பது திண்ணம் என்பதையும் குறிப்பாற் புலப்படுத்து கின்ருன் வானரக்கோன். இத் திருவேங்கட மலையின் மோட்சமளிக்கும் தன் மையும் பேசப்பெறுகின்றது. 'வலங்கொள் நேமி மழைகிற வானவன் அலங்கு தாளினை தாங்கிய அம்மலை விலங்கும் வீடுறு கின்றன மெய்ந்நெறிப் புலன்கொள் வார்கட் கனயது பொய்க்குமோ?" (வலம் - வெற்றி; மழைநிறவானவன்- சீநிவாசன்; அலங்கு - விளங்குகின்ற ] அம்மலையில் எழுந்தருளியிருக்கும் சீநிவாசன் விலங்கு கட்கும் வீட்டுலகத்தை அளிப்பவன் என்று பேசுகின் ருன் கவிஞன். இங்ங்ணம், கம்பன் வாக்கில் காவியப் போக்கில், திருவேங்கடத்தின் பெருமைபேசப்படுவதைக் கண்டு மகிழ்கின்ருேம். 3. வில்லிபாரதம் அன்பர்களே, வில்லிபாரதத்திலும் திருவேங்கடத் தைப்பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. பாண்டவர்கள் விசுவகர்மனுல் இந்திரப் பிரத்தத்தில் புதிதாக இயற்றப் பட்ட அழகிய நகரிலிருந்து கொண்டு ஆட்சி புரிந்த நாளில் வேடர்களால் கவரப் பெற்ற ஒர் அந்தணனின் ஆநிரைகளை மீட்கும் பொருட்டு வில்லெடுக்க ஆயுத சாலையை நோக்கிச் செல்லுங்கால் தருமனுடன் திரெள பதியிருப்பதைப் பார்த்துவிட்டான் அருச்சுனன். அந்தப் —r Т90. கிட்கிந். ஆறுசெல் - 35. D