பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3


3. தெளிந்து சங்கப் பாடல்களில் வரும் வேங்கடம்பற்றிய வருணனைகளைக் கொண்டு சீர்தூக்கி ஆராய்வோமானுல், திருப்பதி மலேயைத் தொல்காப்பியர் கூறும் "வடவேங் கடம்’ என்று அறுதியிட்டு உரைப்பதில் பல்வேறு இடர்ப் பாடுகள் உள்ளன என்பதை அறிவார்கள். இந்தப் பொழிவில் அத்தகைய இடர்ப்பாடுகள் இன்னவை என் பதைத் தெளிவுறுத்துவேன். சங்க இலக்கியங்கள் குறிப் பிடும் வடவேங்கடம் இன்னதுதான் என்று இனங்காட் டவும் முயல்வேன். முதன்முதலில், இன்று திருப்பதி’ என்று வழங்கப் பெறும் நகரத்தின் இருப்பையும், இயற்கைச் சூழல்களை யும் தெளிவாக அறிந்து கொள்வோம். அதன் பிறகு அவற்றைச் சங்க இலக்கியங்களில் வேங்கடத்தைப்பற்றி வரும் வருணனைகளுடன் ஒப்பிட்டு நோக்குவோம். இன்று பெரும்பான்மையோர் திருப்பதி மலையைத் "திருப்பதி என்றே வழங்குகின்றனர். விவரம் அறிந் தோர் அதனைத் திருமலை என்று கூறுகின்றனர். இன்று 'திருமலை என்று வழங்கப்பெறும் மலை தமிழ் கூறும் நல்லுலகத்தின் வடகிழக்கு மூலேயிலுள்ள ஒழுங்கற்ற தாழ்வான சில குன்றுகளின் கூட்டமாகும். இம்மலை 14” @mil - ©5 Dj &60)&#uq6ir@5ıb (North Latitude) 80° @j) நெடுக்குக் கோட்டிலும் (Longitude)அடங்கி, சென்னைக்கு வடகிழக்குத் திசையில் சுமார் 85 கல் தொலைவில் அமைந்துள்ளது. இம் மலை ஏழுமலை என்றே வழிவழி வழங்கப்பெற்று வருகின்றது. இந்த மலேக் குன்றுகள் நேராக ஒர் ஒழுங்கில் அமையவும் இல்லை; ஒன்றை யொன்று தொடர்ந்த நிலையில் ஒரு சங்கிலி போலவும் 2. மலையைத் திருமலை என்றும், மலையின் கீழுள்ள நகரைத் திருப்பதி என்றும் வழங்குவதே சரியாகும்.