பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155


155 வைக்கின்றதோ, அங்ங்னமே சேஷியாகின்ற ஈசுவரனைப் பற்றப் புகும் சேஷ பூதனும் எம்பெருமானுடைய பல உறுப்புகளையும் விட்டுத் தான் உய்வதற்கு இடய்ை உள்ள அவன் திருவடிகளையே பற்றுகின்ருன் என்பது மேற்குறிப்பிட்ட வ க் கி ய த் தி ன் பொருளாகும். குழந்தை தாயின் முலையின் வாய்வைப்பது குழந்தையின் இயல்பாக இருப்பதுபோலவே, இறைவன் திருவடி களில் இழிவது சேதநனின் தன்மைக்கு இயல்பாக அமைந்திருக்கும் என்பது சிந்தித்து அறியத்தக்கது. இக்கருத்துகளே அடிப்படையாகக் கொண்டு பாத வகுப்பு என்னும் துறை எழுந்திருக்க வேண்டும் என்று கருதலாம். 'திருவேங் கடத்து நிலைபெற்று கின்றன சிற்றன்னையால் திருவேங் கடத்துத் தரைமேல் கடந்தன தாழ்பிறப்பின் உருவேங் கடத்துக் குளத்தே யிருந்தன; வுற்றழைக்க வருவேங் கடத்தும் பியஞ்சலென் ருேடினம் மால்கழலே.'" (சிற்றன்னை - கைகேயி; தருவேம் - மரங்கள் வேகப் பெறும்; கடத்து - கடுஞ்சுரத்திலுள்ள; தாழ் பிறப்பு - இழிந்த பிறப்பு; உருவேங்கள் வடிவத்தையுடைய எங்களது; தத்துக்கு - ஆபத்தை நீக்கு தற்பொருட்டு; உற்று - துன்பமுற்று; கடம் - மதத்தையுடைய, தும்பி. யானை, மால் - திருமால்; கழல் - திருவடிகள்.! என்ற பாடலில் திருவடியின் ஏற்றத்தை நூலின் தொடக்கத்தில் எடுத்துக் கூறினர் ஆசிரியர். இதில் 10. பாடல்-1