பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156


156 பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற இறைவனின் ஐந்து நிலைகளில் நான்கு நிலைகள் கூறப்பெற்றிருத்தல் கண்டு மகிழத் தக்கது. 'திருவேங்கடத்து நிலைபெற்று நின்றன என்றதில் அர்ச்சாவதாரம் கூறப்பெற்றிருத்தலைக் காணலாம்; எம் பெருமான் விக்கிரகத்தில் ஆவிர்ப்பவித்திருத்தலையும் உணர்த்துகின்றது. சிற்றன்னையால் தருவேம் கடத்துத் தரைமேல் நடந்தரின் என்றது, விபவத்தை; அதாவது அவதாரத்தை தாழ்பிறப்பினுருவேங்கள் தத்துக்கு உளத்தே இருந்தன என்றது, அந்தர்யாமித்துவத்தை அது நிலைத்தினை இயங்குதினைப் பொருள்கள் எல்லாவற் றிலும் எள்ளினுள் எண்ணெய் போல் மறைந்து இருத்தலையும், அடியார்கள் உள்ளத்தில் வீற்றிருத்தல யும் குறிக்கின்றது. உற்று அழைக்க வரும் கடத்தும்பி அஞ்சல் என்று ஓடின. மால் கழல் என்பது பரத்துவத்துடன் செளலப்பியத்துவத்தையும் காட்டுகின்றது. பரமபதத் தில் எழுந்தருளியிருக்கும் நிலையே பரத்துவம் என்பது; அந்த நிலையிலுள்ள எம்பெருமானையே யானை அரசு ஆதிமூலமே!’ என்று கூவி ஒலமிட்டது. எம்பெருமானும் தன் பரத்துவ நிலையை மறந்து தனது பேரருளிளுல் அரை குலையத் தலைகுலைய யானே இருந்த மடுக்கரைக்கே வந்து உதவினன். இந்த செளலப்பிய மகாகுணத்தில் ஈடுபட்டே மேற்கூறியவாறு உணர்த்தினர் ஆசிரியர். எம்பெருமா னின் வியூக நிலையை இன்னெரு பாடலில் காட்டுவேன். அன்பர்களே, இப்பொழுது கூறப்போகும் பாடல் அகப் பொருள் துறையைக் கொண்டது. தலைவனப் பிரிந்து வருந்தி மாலைப் பொழுதுக்கும் அன்றிற் குரலுக் கும் ஆற்ருத தலைவியின் நிலையைக் கண்டு தோழி இரங்குவதாக அமைந்தது இப்பாடல்.