பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160


160 தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் பெரும்பாலும் பயிர்த் தலையிலேயே சிறு குடில் அமைத்து, அதில் குடியிருந்து கொண்டு, அப்பயிரைத் தம் உயிர்போல் பாதுகாப்பது போலவே, திருமகள் கேள்வஞன பரமபதநாதனும் தனக்கு அடிமை செய்து உய்வதற்காகவே பிறவி எடுத்த ஆன்மாக்களேயெல்லாம் ஆட்கொண்டு உய்விக் கும் பொருட்டுப் பெருங்கருணையால் இந்நில உலகில் 108 திவ்வியதேசங்களிலும் திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருந்து ஆன்மாக்களே உய்விக்கின்ருன். இங்ங்ணம் ஆன்மப்பயிர்களைப் புரக்கும் எம்பெருமானுக்குப் பக்தி உழவன்’ என்று திருநாமம் இட்டு மகிழ்வர் பக்திசாரர் என்ற திருமழிசைப்பிரான். 'வித்தும் இடவேண்டும் கொல்லோ விடைஅடர்த்த பக்தி உழவன் பழம்பு னத்து' (விடை காளே, அடர்த்த அடக்கினர் என்று கூறுவதைக் காண்மின். இந்த 108 திவ்விய தேசங்களில் பதினேழு திவ்வியதேசங்களை யாதொரு அடைமொழியுமின்றி ஒரு பாசுரத்தில் அடக்கி வைத் துள்ள அழகினைக் கண்டு மகிழலாம். 'அரங்கங் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டடிய கரம்கண், ன மங்கை நறையூர்கடன் மல்லைகச்சி கண்ண புரம்கண்டி பூர்தஞ்சை மாலிருஞ் சோலைபுல் லாணிமெய்யம் 15. நான்முகன் திருவந்-21