பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163


163 'மணியின் அணிகிற மாயன்தமர் அடிறுே கொண்டு அணிய முயலின் மற்றில்லை கண்டீர்.இவ் அணங்குக்கே.' (மணி - நீலமணி, மாயன்தமர் - திருமாலடியார்.i என்ற திருவாய் மொழிப் பாசுரத்தின் பகுதியை அடி யொட்டி எழுந்ததாகக் கருதலாம். தத்து வக்கருத்துகள் : அன்பர்களே, மேலே ஒரு சில வைணவ சமயத் தத்துவக் கருத்துகள் அமைந்த பாசுரங்களைக் காட்டி னேன். இன்னும் ஒரு சிலவற்றைக் காட்டுவேன். எம்பெருமானது திருமார்பில் பூரீவத்ஸம் என்னும் மறுவும் பெரிய பிராட்டியாரும் இருப்பதாகக் கருதுவர் வைணவர்கள். அடியார்களின் பிழைகளைப் பாராட் டாமல் பொறுத்து அவர்களே ஆட்கொண்டருளுதற்குப் புருஷகாரமாக (பரிந்துரைப்பவளாக) அகலகில்லேன் இறையும் என்று இருப்பவள் எம்பெருமாட்டி. ஆகவே, தன்னைச் சரணமடைந்தவர்கள் எத்தகைய வராயினும் அவர்களை விலக்காமல் அ னை வ ைர யு ம் இனிது வாழுமாறு கருணை புரிவான் என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் வைணவர்கள்". திவ்விய கவியும் இதனை நினைவில் கொண்டே, "கண்ணனையேன் நெஞ்சுருகேன் அவைகொண்டு)என் கண்ணும் நெஞ்சும் புண்அனையேன் கல்லனையேன் என்ருலும் பொற்பூங் கமலத் 19. திருவாய். 4.6:6. 20. பாடல்-86