பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167


167 ஆசையால் அழிந்தது. அசுணம் ஒலியால் அழியும். இஃது எங்கனம் எனில் கூறுவேன். அசுணம் இசையறி குறிஞ்சி நிலப் பிராணி. இதனைப் பிடிக்க விரும்பும் குறவர்கள் நிலவு காயும் மாலைப் பொழுதில் வேய்ங்குழல் முதலிய வற்ருல் இன்னிசையை எழுப்புவர். அந்த இசையைச் செவிமடுத்துக் களிப்படைய விரும்பிய பறவைகள் அவ் வின்னிசையைச் செவியிலேற்றுத் தம்மை மறந்த நிலையி லிருக்கும்பொழுது அக்குறவர்கள் பறையோசையை முழக்குவர். அவ்வல்லோசையைக் கேட்டவுடன் அப் பறவைகள் இறந்துபடும். அவற்றை அவர்கள் எடுத்துச் செல்வர். இது செவி என்னும் பொறிக்குரிய ஒலியின்பத். தின் ஆசையால் அழிந்தது. வண்டு மணத்தால் அழியும். வண்டுகள் மலர்களின் நறுமணத்தை அவாவித் தாமரை முதலிய பெருமலர்களில் வந்து தங்கும். அம்மலர்கள் குவிந்து கொள்ளுங்கால் வண்டுகள் மலர்களில் அகப் பட்டுத் தவிக்கும். அன்றியும், சண்பகமலரின் நறுமணத் தையும் அதன் நறுந்தேனையும் நுகரும் விருப்பால் அதனை அணுகி மொய்த்து அம்மலரின் வெப்பம் தாங்க முடியாமல் இறந்துபடும். மற்றும், நறுமண விருப்பிளுல் தேனில் மொய்த்து அதனை மிகுதியாக உண்டு மயங்கி மீளமாட்டாது சிக்கி அழிதலும் உண்டு. இது மூக்கு என்னும் பொறிக்குரிய நாற்றவின்பத்தின் ஆசையால் அழிந்தது. விட்டில் ஒளியால் அழியும். இதனையும் விளக்கு வேன். விட்டில் பூச்சி விளக்கொளியைக் கண்டவுடன் அதனிடத்து அவாவோடு ஓடிவந்து விழுந்து இறந்து படும். இது கண்ணென்னும் பொறிக்கு உரிய ஒளியின் ஆசையால் அழிந்தது. ஆயின், மனிதன் ஐம்புலன்களை யும் ஒருசேர நுகரத் தொடங்கி அழிந்து படுகின்ருன், இங்ங்னம் ஐந்து புலன்களால் மக்கள் அழிந்துபடுவதைக் கூறுகின்றர் திவ்விய கவி. . .