பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169


#69 "சித்திக்கு வித்ததுவோ இதுவோவென்று தேடிப் பொய்ந்நூல் கத்திக்கு வித்தபல் புத்தகத்தீர்! கட்டுரைக்க வம்மின் அத்திக்கு வித்தனையும் உண்ட வேங்கடத் தச்சுதனே முத்திக்கு வித்தக னென்றே சுருதி முறையிடுமோ." |சித்திக்கு-வீடு பேற்றுக்கு வித்து-மூலம்; பொய்ந் நூல்-பர சமய நூல்; கத்தி-கதறிப்படித்து, கட்டுரைக்க -உறுதியாகச் சொல்ல; அத்தி.நீர்; கு-சூழ்ந்த, சுருதி. வேதம்.) வீடுபேற்றினை அளிக்கவல்லவன் திருமலையில் எழுந்தருளி யிருக்கும் திருமாலே என்று வேதங்கள் வற்புறுத்திக் கூறும் என்பதனை உறுதியாகக் கூறுவர் திவ்வியகவி. பிற சமயநூல்களில் ஆழங்கால்பட்டு முத்திக்குரிய மூலப் பொருளை இன்னதென அறியாது மயங்குபவர்களே நோக்கிக் கூறும் பாசுரம் இது. 'பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்தன்று உடனே விழுங்கி, கரந்து உமிழ்ந்து கடந்துஇடங்தது கண்டும் தெளியகில்லீர்; சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குரு கூர்.அதனுள் பரன்திறம் அன்றிப்பல் உலகீர்தெய்வம் மற்றுஇல்லை பேசுமினே.” (கரந்து-மறைத்து; பரன். மேலானவன்; 27. பாடல் 33 28. திருவாய்-4.10 : 3