பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5


5 றது. இறைவனின் கருவூலமும் பொங்கி வழிந்து கொண்டே உள்ளது. இந்த ஆண்டு சனவரி முதல்நாள் அன்று உண்டியில் விழுந்த தொகை இரண்டு லட்சத்துக்குமேல் சென்றுவிட்டது என்றும், இதுகாறும் திருக்கோயில் வரலாற்றிலேயே ஒருநாளில் இந்த அளவு சேர்ந்ததில்லை யென்றும் கூறப்பெறுகின்றது. சங்க இலக்கியக் குறிப்பு: இனி, சங்க இலக்கியங்களில் வடவேங்கடத்தைப் பற்றியுள்ள குறிப்புகளே ஆராய்வோம். அங்குக் காணும் வருணனைகள் இன்று நாம் வேங்கடத்தில் காணும் காட்சி கட்கு முற்றிலும் வேறுபட்டனவாகவே உள்ளன. பத்துப் பாட்டில் பட்டினப்பாலே, சிறுபாணுற்றுப்படை இவற்றில் உள்ள ஒருசில குறிப்புக்களையும், எட்டுத் தொகையில் அக நானுாறு, புறநானூறு, குறுந்தொகை போன்ற நூல் களில் வடவேங்கடத்தைப்பற்றிப் பல குறிப்புகளையும் காண்கின்ருேம். புறப்பொருள் வெண்பா மாலையிலும் சங்கமருவிய நூ லா கி ய சிலப் பதிகாரத்திலும் இம் மலையைப் பற்றிய குறிப்புக்கள் காணப் பெறுகின்றன. கண்ணனுர் பாடியுள்ள அகப்பாடலில் வேங்கட நெடுவரை என்ற தொடர் காணப் பெறுகின்றது. இச் சொற்ருெடர் நீண்ட மலைத் தொடர் என்ற பொருளில் வருகின்றது. தலைமகன் பிரிவில்ை வேறு பட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்திக் கூறியதாக அமைந்தது இப் பாடல் இதில் வடவேங்கடத்தைப் பற்றி வரும் பகுதி இது : சாரல் ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி கன்றுபசி களைஇய பைங்கண் யானை முற்ரு மூங்கில் முளைதரு பூட்டும்