பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170


170 என்ருற்போன்ற பாசு ரங் களி ன் வாய்பாட்டைக் கொண்டது இப்பாசுரம். இங்ங்னம் ஆழ்வார்களின் பாசுரங்கள் திவ்வியகவியின் வாக்கில் செல்வாக்குப் பெற்ற இடங்கள் எண்ணற்றவை. - இன்னொரு பாசுரத்தில் முத்தியை விரும்புவோரைத் திருவேங்கடமுடையானின் திருவடிகளைத் தரிசிக்க வரு மாறு கூவி அழைக்கின்ருர் ஆசிரியர். 'உடுக்கும் உடைக்கும் உணவுக்கு மேயுழல்வீர்! இனிநீர் எடுக்கும் முடைக்கு ரம்பைக் கென்செய்வீர்? இழிமும்மதமும் மிடுக்கும் உடைக்குஞ்சரம் தொட்டவேங் கடவெற்பர் அண்ட அடுக்கும் உடைக்கும் அவரடி காண்மின் அனைவருமே.”* (உழல்வீர்-அலைகின்றவர்களே; முடைக் குரம்பைநாற்ற உடம்பு; இழி-ஒழுகுகின்ற; மிடுக்கு-வலிமை; குஞ்சரம்-யானை, அண்டம் அடுக்கு-அண்ட கோளங் களின் வரிசை.) எம்பெருமானுடைய திருவடிகளைத் தரிசித்தால் முத்தி பெறுவது உறுதி என்பது குறிப்பாக உணர்த்தப் பெறு கின்றது. இப் பாசுரத்தில். திருவேங்கடமுடையானத் துதிக்க வல்லவர்கட்கு எவ்விதத்துன்பங்களும் உளவாகா என்று வேருெரு பாடலிலும் புலப்படுத்துகின்ருர்." திருவேங்கட முடையான வணங்கியவர்கள் அதன் பயனக மறுமையில் பெறும் பயன்களை இவ்வாறு வரி சைப்படுத்திக் கூறுகின்ருர் அய்யங்கார். 29. பாடல்-35 30, பாடல்-94