பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173


173 'மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி' (மார்வம்-இதயம்) என்ற பெரியாழ்வாரின் பாசுரப் பகுதியையும் அடிப் படையாகக் கொண்டு அமைந்தவையாகும். 'அவன்சே வடிக்கே தீங்குஅட மாலைக் கவிபுனைந்தோம்’ என்ற இப்பாசுரப்பகுதி, "சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை" என்ற பொய்கையாழ்வார் வாக்கையும், 'இருந்தமிழ் நல்மாலை இணையடிக்கே சொன்னேன்" "சொல்மாலை ஏத்தித் தொழுதேன்' என்ற பூதத்தாழ்வார் வாக்குகளையும், “மாதவன, சொல்மாலை எப்பொழுதும் சூட்டு' "முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல்மால' என்ற நம்மாழ்வாரின் வாக்குகளையும்,

  • கலிகன்றிச் செஞ்சொலால் எடுத்த தெய்வநல் மாலை' என்ற திருமங்கையாழ்வாரின் வாக்குகளையும் அடி யொட்டி அமைந்தவையாகக் கருதலாம்.

35. பெரியாழ்-திரு. 4. 5: 3 36. முதல் திருவந்.1 37. இரண்-திருவந்,74 38 இரண்-திருவந்:85 39. பெரி. திருவந்-45. 40. திருவாய். 7-5 : 1.1 41. பெரிய திரு.1.1 , 10