பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186


#86 தாய், செம்புள்ளிகளையுடைய யானைகள் தங்கப் பெறு தாய்த் திகழ்கின்றது. அடுத்து; "வள்ளிபுணர்ந் தாறுமுக மன்னிமயில் மேற்கொளலால் வெள்ளிலைவேல் வேள்போலும் வேங்கடமே." (வள்ளி - வள்ளி நாயகி, வள்ளிக் கொடி, ஆறு - எண், நதி, மயில் வாகனம், பறவை; வேள் . முருகன்.) என்ற வரிகளில் வேலன் வேங்கடத்துக்கு ஒப்பாகின்ருன். வேங்கடத்தில் வள்ளிக் கொடிகள் உள்ளன; ஆறுகள் இருக்கின்றன; மயில்கள் உலவுகின்றன. முருகனும் வள்ளியை மணம் புணர்ந்தவன்; ஆறுமுகங்களையுடை யவன்; மயிலே வாகனமாகக் கொண்டவன். அடுத்து, ஆதிசேடனுக்கும் வேங்கடத்திற்கும் ஒப்புமை கூறப் பெறுகின்றது. "புள்ளரவம் நீரரவம் போர்மா அரவம்அரு வெள்ளரவம் வெற்பாகும் வேங்கடமே." (அரவம் - ஒலி, பாம்பு; மா - விலங்கு.) பறவைகளின் ஒலியும், அருவிநீர் பெருகிய ஒலியும்,போர் செய்கின்ற யானை முதலியவற்றின்ஒலிகளும் நீங்காதிருப் பதால் வேங்கடமலை அரவ வெற்பாயிற்று. சேஷகிரி என்பது தமிழில் அரவவெற்பு என்று பரியாயநாமமாகப் பெயர் பெறுகின்றது. இந்த அடிகளில் திரிபு" என்னும் சொல்லணி அமைந்து அழகு செய்வதைக் கண்டு மகிழ வாம். 66. பாடல்-7 67. பாடல் - 8 68. திரிபாவது . ஒவ்வோரடியிலும் மு. த லெழுத் து மாத்திரம் வேறுபட்டிருக்க, இர்ண்டு முதலிய பல எழுத்துகள் ஒன்றி நின்று பொருள் வேறுபடுவது.