பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190


196 பொன்னுாஞ்சலிலிருந்துகொண்டு உந்தி உந்தித் தள்ளி விளையாடுகின்றனர். அந்த ஊஞ்சல் அவிட்ட நட்சத்தி ரத்தில் படுங்கால் அங்கு அம்மகளிர் இறங்குகின்றனர்." மூன்ருவதாக: வேங்கடமலையின் உயர்ச்சியைக் காட்டு வதற்காகவுள்ள வேறு சில வருணனைகளையும் காண் போம். வேங்கடமலையில் மண்டிக்கிடக்கும் உயர்ந்த சாதி மூங்கில்கள் முற்றி வெடித்தலால், அவற்றினின்றும் சிதறும் முத்துகள் மேகத்தைத் தொளை செய்து அம் மேகத்தினின்றும் வெளிப்படுகின்ற மழைநீர்க் கட்டி களுடன் கீழே விழுகின்றன." அம் மலையின்மீது வானுற ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில் அவண் காணப்பெறும் இந்திர வில்லில் தொடுத்தற்கு அமைந்த அம்பு போல் காணப்பெறுகின்றது." அந்த மூங்கிலின் உச்சியில் கட்டப்பெற்ற தேன்கூடு உம்பருலகத்து நிலைக்கண்ணுடி போல் விளங்குகின்றது. ' உம்பருலகின் ஐவகைக் கற்பகத் தருக்களில் கட்டப்பெற்ற செவ்விய தேன் இருல் மலையின்மீது வரையாடுகள் தாவிப் பாய்வதால் கிழிந்து தேனைச் சொட்டுகின்றது. பாக்கு மரங்களைப் பற்றிய வருணனை பாங்குற அமைந்து படிப்போரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. "பொன்கமழும் கற்பகத்தின் பூங்கா வனத்துக்கு மென்கமுகம் காலாகும் வேங்கடமே." {காவணம் - பந்தல்; கமுகு - பாக்கு.) 81. பாடல் - 26 82. பாடல் - 33 83. பாடல் - 34 84. பாடல் - 36 83. பாடல் . 40 8; பாடல் - 35