பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192


192 யில் மேகங்கள் இடிமுழக்கம் செய்கின்றன. அம் முழக் கத்தை மதயானைகளின் பிளிறல்கள் என்று கருதி அவ்யானைகளே விழுங்குவதற்குமலைப்பாம்புகள் வாயைத் திறந்த வண்ணம் காத்திருக்கின்றன. 'அங்கயலின் மேகம் அதிரப் பெரும்பாந்தள் வெங்கயமென் றங்காக்கும் வேங்கடமே.' (அயல் அருகு; அதிர-முழங்க, பாந்தள் - மலைப் பாம்பு, கயம் - யானே; அங்காக்கும்-வாய் திறக்கும்.) என்ற அடிகளில் இக்காட்சியினைக் காணலாம். தேவர் களும் குறிஞ்சி நிலத்துக் குறத்தியரும் அமிர்தத்தையும் குறிஞ்சித் தேனையும் பண்டமாற்றுச் செய்து கொள்ளு கின்றனர். இதல்ை உம்பருலகம் திருமலைக்கு மிக அண்மையில்உள்ளது என்பதும், நாளும் அமிர்தத்தையே உண்பவர்களான தேவர்கள் அதனை வெறுத்தொழித்து: அதனினும் இனிய தேனினை விரும்பிப் பெறுகின்றனர் என்பதும் பெறப்படுகின்றன. இன்ைெருஅழகான காட்சி: திருமலையில் பெண்குரங்கொன்று மாமரத்தில் பழுத்துத் தொங்கும் தேமாங்கனி யொன்றினைக் கையில்கொண்டு தாவிச் செல்லுகின்றது. இதனைக் காணும் உம்பருலகத் துக் கற்பகத்தருவில் அமர்ந்திருக்கும் ஆண் குரங்கு அக் கனியைத் தனக்குத் தருமாறு கையை நீட்டுகின்றது.” இதல்ை கற்பகக் காடுகளில் கிடைக்கும் கனிகளிலும் திருமலையில் காணப்படும் கனி சுவையில் இனியது என்னும் கருத்துத் தோன்றுகின்றது. மலர்களைக் கொண்டு காட்டப் பெறும் காட்சி மனத்தினை மாண் புறுத்துகின்றது. கொன்றை மரங்கள் சொரியும் பொன் 91. பாடல் - 30 92. பாடல் - 41 93, பாடல் - 42