பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194


ł94 மீது கறுக்கொண்டு எழும் இராகு என்னும் கரும்பாம்பு போல் தோன்றுகின்றது. ஐந்தாவதாக வேங்கடமலையைப்பற்றி மேலும் சில சிறப்புகளைக் காண்போம். 'திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ கம்வினை ஒயுமே.'" என்று ஆழ்வார் கூறியதையே விரித்துக் கூறுவார்போல் சில செய்திகளைக் கூறுகின்ருர் திவ்வியகவி. பிறவிப் பெருங் கடலைத் தாண்டி வைகுந்தம் புக்கவர்களும் மீண்டும் திருவேங்கடமலையைத் தொழ விரும்புகின்ற றனர்." நான்மறைகளும் நான்குபக்கங்களிலும் வேலிபோல் நின்று வேங்கடத்தைத் தொழுகின்றன." 'திருப்பதி மிதியாப்பாதம் சிவனடிவனங்காச் சென்னி" என்ற பாடலை நாம் கேள்வியுற்றிருக்கின்ருேம். திருப் பதிக்கு வந்து சேர்ந்தமாத்திரமே பரமபதப்பேறு கிட்டி விடும். இதனைக் கேள்வியுற்ற பொன்மலையான மகா மேருவும் வெள்ளிமலையான கைலாய கிரியும் வேங் கடத்தை வணங்கி நிற்கின்றன." பிறக்குங் காலத்தும் வளர்ந்து உயிர் வாழும் காலத்தும் இறக்குங் காலத்தும் உண்டாகின்ற பலவகைத் துன்பங்களும், அவற்றிற்கெல் லாம் காரணமான வினைத்தொடர்களும் திருமலைக்கு வந்தவுடன் "தீயினில் தூசாகும்.' திருவேங்கட மலை யின் வரந்தரும் ஆற்றல் சொல்லுந்தரமன்று. பைத்தியம், மகப்பேறின்மை, முடம், கூன், குருடு, செவிடு, ஊமை 100. திருவாய். 3-3:8 101. பாடல் . 10 102. பாடல் - 11 103. பாடல் . 12 104. unri-Go - 14