பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202


202 நமது திவ்விய கவியும் தம் பாடலில்' குறிப்பிடு கின்ருர். பிரளய வெள்ளத்தில் தான் ஒர் ஆலிலை யில் துயின்றமை இரண்டு பாடல்களில் குறிப்பிடப் பெறு கின்றது.' இராசசம் தாமத குணங்களால் மிக்கவர் தம் பக்கல் வாராது கரும கதியால் வெவ்வேறு துணிவு கொள்ளும்படித் தனது அம்சத்தால் பலப்பல தெய்வங் களையும், பலப்பல சமயக் கோட்பாடுகளையும், பல்வேறு வழிபாட்டு முறைகளையும் அமைத்துவைத்த எம்பெரு மானின் அற்புத ஆற்றலை ஆழ்வார் பெருமக்கள் சிறப்பித்து பேசுவர். "பிணக்குஅற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி உரைத்த கணக்குஅறு கலத்தனன்' என்றும், 'வணங்கும் துறைகள் பலபல வாக்கி மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பலபல வாக்கி அவையவைதோறும் அணங்கும் பலபல வாக்கிகின் மூர்த்தி பரப்பி வைத்தாய்" (விளங்கும் - மாறுபடும்; அணங்கு - தெய்வங்கள்; மூர்த்தி வடிவம்.) என்றும் நம்மாழ்வார் குறிப்பிட்டதை நினைவில் கொண்டு இந்த ஆசிரியர், 140. பாடல் - 13 141. பாடல் . 27,47 142. திருவாய் .1.3:5 143. திருவிருத்தம் . 96