பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210


3. திருவேங்கடக் கலம்பகம் இனி, திருவேங்கடக் கலம்பகம்’ பற்றி ஒரு சில கருத்துகளைக் கூற முற்படுகின்றேன். திருவேங்கடக் கலம்பகம்’ என்பது, திருவேங்கடமலைமீதும் அம்மலையின் மீது திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமுடையான் மீதும் காதல் கொண்ட உள்ளத்தினின்றும் உருக்கொண்ட நூலாகும். பலவகை நிறமும் மணமும் கொண்ட மலர்களால் தொடுக்கப் பெறும் மலர் மாலேயினைக் கலம்பகம்’ என வழங்கும் மரபு ஒன்று உண்டு. "பல்பூ மிடைந்த படலைக் கண்ணி' என்ற பெரும்பாளுற்றுப் படைத் தொடருக்கு பல பூக்கள் நெருங்கிய கலம்பகமாகிய மாலை’ என்ற நச்சினர்க்கினியர் உரை இதனை ஒருவாறு விளக்கும். 'களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த, அலங்கலங் தொடையல்" என்ற தொண்டரடிப் பொடிகளின் திருவாக்காலும் இது புலகுைம். இதனை இக்காலத்தார் 'கதம்பம்’ என்று வழங்குவர். எனவே, பலவகைப்பட்ட நிறமும், வடிவும், மணமும் உடைய மலர்களால் தொடுக்கப்பெற்ற மலர் மாலை கலம்பகம்’ என்று பெயர் பெற்றதைப் போலவே, பலவகையான ஓசை நயமுடைய பாக்களும், இனங் 185. பெரும்பாளு ற் - வரி 174. 186. திருப்பள்ளி எழுச்சி-பாசுரம்-5.