பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212


212 அன்பர்களே, இவ்விருசாரார் கொள்கைகளுள் பின்னர்க்கூறிய கொள்கையே வலிமையுடையதாகத் தோன்றுகின்றது. பதினெட்டு உறுப்புகளையுடையது கலம்பகமாயின் பதினெட்டின் மேலும் உறுப்புகள் அமையப் பாடுதல் இலக்கண வரம்பினை மீறியதாகும். ஆயின், கலம்பக நூல்களிலெல்லாம் மேற்குறிப்பிட்ட பதினெட்டு உறுப்புகளேயன்றி ஊர், மடல், கொற்றி யார், பிச்சியார், வலைச்சியார், இடைச்சியார் எனப் பிறஉறுப்புகளும் கலந்து வருதல் உண்டு. ஆதலால், பதினெண் உறுப்பால் பெயர் அமைந்தமையாகக் கூறுவது பொருந்துவதின்ருகின்றது. அவை பிற்கால வழக்கில் வந்ததாகக் கொள்ளினும், இலக்கண வரம் புடைய நூலுக்கு அவ் வரம்பின் மாறுபட்ட முறை நுழைதல்கூடாது. மேற்கூறியவற்றுள் தலைவனது ஊரை சிறப்பிப்பது 'ஊர்' எனப்படும். தலைவன் மடலேறுவன்’ என்று கூறுவது மடல். கொற்றி, வைணவ வேடம் தாங்கியவள். பிச்சி, சிவவேடம் புனைந்தவள். இடைச்சி யார் தயிர் மோர் விற்கும் இடைக்குலப் பெண். வலைச் சியார் மீன் விற்கும் வலேயர் மகள். இளைஞர் தமது காமக்குறிப்பைப் புலப்படுத்தி இவர்களுடன் உரையாடு வதாகச் செய்யுள் செய்வது கலம்பக ஆசிரியரின் மரபாக இருந்து வருகின்றது. கலம்பக நூலில் ஒருபோகு கொச்சகக் கலிப்பாவும், வெண்பாவும், கலித்துறையும் முதற் கவியுறுப்பாக அமைய, இடையிடையேமருட்பா, ஆசிரியப்பா,கலிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை முதலியனவும் விரவி வரும். மடக்குச் செய்யுட்கள் மடங்கி மடங்கி வரும். பதினெண் உறுப்புகளிலாயினும், ஒருபோகு முதலிய பாவிலு