பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218


248 அருச்சித்துத் திருவடிகளில் இடும் பொன் மலர்களைக் காட்டிலும் திருவேங்கட மலையின் வடக்கில் குரவை என்னும் ஊரிலுள்ள பீமன் என்னும் குயவன் அருச்சித்து இடும் மண் மலர்களை மிகவும் உவந்து ஏற்றதுமான திருவிளையாடல்களின் பெருமையை நினைந்து போற்று கின்ருர், - இவற்றைத் தொடர்ந்துவரும் இரண்டு நாற்சீர் ஈரடி அம்போதரங்கங்களிலும் பொன்மயமான மேருமலையின்மீது ஊர்ந்து வரும் காளமேகம்போல வினதை மகன் கருடன் மீது ஏறிவருகின்ற பெருமிதத்தையும், கரிய பெரிய கடலின்மீது பொருந்திய பாசிபோல் அழகிய திருமால் பால் கிடக்கும் நறுமணங்கம்ழும் திருத் துழாய்மாலையின் பெருமையையும் வியந்து போற்றுகின்ருர். அடுத்து வரும் நான்கு ஒரடி அம்போதரங்கங்களிலும் எம் பெருமானின் இரண்டு திருக்கைகளிலும் இரு சுடர்களைத் தாங்கி நிற்கும் பெருமை, இரட்டை மருத மரங் களிடையே தவழ்ந்து சென்ற எளிமை, அருமறைகளின் திருமுடியில் அமர்ந்திருக்கும் அருமை, உளங்கனித் திருக்கும் அடியவர்தங்கள் உள்ளத்துள் தேகை அமர்ந் திருக்கும் இனிமை - ஆகிய பெருங்குணங்கள் பேசப் பெறுகின்றன. இவற்றினை அடுத்து வரும் எட்டு இருசீர் ஒரடி அம்போதரங்கங்களிலும் பூமியை இடந்தமை, கடலில் பள்ளி கொண்டமை, சகடு உதைத்தமை, பகடு கொன்றமை, கருணை சுறந்தமை, மருள் ஒழித் தமை, அளவற்ற திருக்குணங்களை உடைமை, உலகின உகந்தமை போன்ற வெற்றிச் செயல்களைப் பேசி மகிழ் கின்ருர் ஆசிரியர். - - தனிச்சொல்லை அடுத்துவரும் நேரிசை ஆசிரிய சுரிதகத் தில் திருவேங்கட. முடையானப் یاa)utنلی புகழ்ந்து