பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219


219 'ஒழிவில் காலமெல்லாம் உடய்ை மன்னி வழுவிலா அடிமை செய்யும் பேறு கிட்டும்படி அருள்பாலிக்கும்படி வேண்டுகின்ருர். அடுத்து வரும் செய்யுள் ஒன்றில் நோக்கொண்டு மானிடம் பாடாது இறைவனேயே பாடும் வரம் தருமாறு இறைஞ்சுகின்ருர். 'பொருளடுத்த முதிர்தீஞ்சொல் பூந்தமிழாற் சிறியேன்.இப் புவியில் போகம் மருளடுத்த மாந்தர்தமைப் பாடாதுன் புகழ்பாட வரந்தங் தாள்வாய் அருளடுத்த கடைக்கண்ணு அம்புயப்பெண் அடுத்துறையும் அகன்ற மார்பா, இருளடுத்த மலர்ச்சோலை யினமடுத்த வடமலைவாழ் எம்பி ரானே." (பூ தமிழ்-அழகிய தமிழ்; போகம்-சிற்றின்பம்; மருள்-மயக்கம்; அருள்-கருணை; அம்புயப் பெண்-பெரிய பிராட்டி இருள்-அடர்ந்த இருள்; இனம்-கூட்டம்.) எம்பெருமாட்டியுடன் பொருந்தியிருக்கும் எம்பெரு மானையே வழிபடவேண்டும் என்ற வைணவ தத்துவம் இப்பாட்டில் அமைத்து கிடப்பது கண்டு மகிழத்தக்கது. 'அகலகில்லேன் இறையும்’ என்று அலர்மேல் மங்கை உறைமார்பனையே சரணமடைந்த நம்மாழ்வாரின் தத்துவமே இந்த நூலின் பரசுரங்கள்தோறும் நிழலிடு வதைக் கண்டு அநுபவிக்கலாம். 188 பாசுரம்-4,