பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224


224 நிற்கும் நிலையில், குறிகூற வல்ல குறத்தியொருத்தி அவளே அடைந்து குறி தேர்ந்து, தலைவன் வரவு கூறித் தலைவியை மகிழ்விப்பதாகச் செய்யுள் புனைவது “குறம்’ என்னும் உறுப்பாகும். 'எந்தவி தங்களும் அறிகுற மகள்.நான்; இங்கெதிர் வந்தினி எனதித மொழிகேள் : அந்தமு றந்தனில் நவமணி கொடுவா; அன்பில் அணிந்திட அழகிய கலைதா, கந்தமி குந்த தனந்தனில் குறியே கண்டனன் கின்று;அலர் கமழ்குழல் மடவாய்! வந்தெவ ருக்தொழ வடமலே தனில்வாழ் வண்துள வன்தினம் மருவுவன் உனையே!' (அறி-அறிந்த; இதம்மொழி-நல்வார்த்தை; நவ மணி-புதிய நெற்கள்; கலை-ஆடை, கந்தம்-மணம்; தனம்-கொங்கை; அலர்-மலர்; குழல்-கூந்தல்; வடமலை. வேங்கடமலை, துளவன்-திருத்துழாய் மாலையணிந்தவன்; தினம்-நாள்தோறும்; மருவுவன்-கூடுவன்.) இதில், “மணம் வீசும் மலர்களே அணிந்த கூந்தலை யுடைய நங்கையே, நான் குறி சொல்லும் வகைகள் எல்லாவற்றையும் அறிந்த குறமகள். இங்கு என் எதிரில் வந்து என் நன்மொழியைக் கேட்பாயாக. அழகிய முறத்தில் புதுநெல்லேப் பரப்புக. யான் உடுத்திக் கொள்ளும் பொருட்டு அழகிய ஆடையொன்றினைத் தருக. மணம் மிக்க நின் கொங்கைகளில் நல்ல குறிகளை நிதானித்துப் பார்த்தேன். யாவரும் தொழுவதற்காக வடமலையில் எழுந்தருளியிருக்கும் திருத்துழாய் மாலை யணிந்த திருவேங்கடமுடையான் உன்னே நாள்தோறும் 493, பாசுரம்-48,