பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226


226 மகிமை, வீறும்-பெருமை பெற்ற விற்பதோ-விற்கப் படுவதோ?, வரைந்திடும்.அறுக்கப்படும்; விதியின்கட்டளையின்படி; கொம்பு-கிளை, அறம்.நல்வினை; சுரர். தேவர்; தண்டிகை-சிவிகை; சரதம்-உண்மை.) "வேடர்குலத்து உதித்த பூங்கொம்பு போன்ற எங்கள் மகளே மணம் பேசவந்த அரசர் விடுத்த துரது வனே! நான் கூறுவதைக் கேட்பாயாக. மலேயில் எழுந் தருளியிருக்கும் எம்பெருமானது திருவருளினால் மகிமை பெற்றவள் எங்கள் செல்வி. அவள் உங்கள் யானையின் கொம்புபோல் விற்கப் பெறும் பொருள் என நினைத்தீர் களோ? (அன்று). அறுக்கப்பெறும் மரக் கொம்புபோல கட்டளையின்படி எந்த மரத்தினத்தையும் அடையுமோ? (அன்று). உம்பர் உலகிலுள்ள கற்பகத்தரு வெளிவிட்ட கிளைபோல தேவர்கள் தொடவும் பொறுக்குமோ? (பொருது). அப்பனே, சொல்வாயாக. அரசர்க்குப் பொருந்திய கொம்பு சிவிகைக்குப் பொருந்திய வளைந்த கொம்பேயாகும். இஃதே உண்மை என்பதை அறிவா யாக’ என்று இகழ்ந்து உரைக்கின்றனர் மறவர்கள். இதில் பிற கடவுளர்களைச் சிறிதும் மதியாது திரு. மாலடிக்கே தொண்டு பூண்ட தமது மன உறுதியினை வெளியிடுகின்ற குறிப்பு எண்ணி மகிழத்தக்கது. பாண்: தலைவியை மணந்ததலைவன் பரத்தையிடம் சென்று இன்பம் நுகர்ந்து மீண்டமை உணர்ந்த தலைவி ஊடல் கொண்டு கதவிற்குத் தாழிடுகின்ருள். அவளே வாயில் வேண்டும்படி தலைவன் பாணனை ஏவுகின்ருன். அப் பாணன் தலைவியிடம் சென்று இனியதொரு பாடலை வீணையில் இசைத்து அவளது ஊடலைத் தணிக்க முயல்