பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231


23i ஊசல் : ஆசிரிய விருத்தத்தாலாதல், கலித்தாழிசையா லாதல் ஆடீரூசல், ஆடாமோவூசல் ஆடுகலுசல் என்று ஒன்ருல் முடிவுறக் கூறுவது இத்துறையாகும். 'பொருளலா விடயத்தைப் பொருளென் றெண்ணிப் போவதுமீள் வதுமாயெப் பொழுதும் ஆடும் மருளுலா மனவூசல் சுத்தம் செய்து மாருது வளர்பத்தி வடத்தைப் பூட்டி இருளைகேர் குழல்கிலப்பெண் அலர்மேல் மங்கை இருவரொடு மேயதன்மேல் ஏறி கின்று, மருளினுன் மெள்ள அசைந் தாடிர் ஊசல் ஆதிவட மலைமாயர் ஆடீர் ஊசல்.” (எண்ணி-திரியாகக் கருதி; மீள்வது-மீண்டு வருவது; மருள்-மயக்கம்; பத்தி-பக்தி; வடம்-கயிறு; இருளைநேர்இருட்டையொத்த; நிலப்பெண்-பூமிப்பிராட்டி, அலர் மேல் மங்கை-பெரிய பிராட்டி, வீறும்-ஒப்புயர்வில்லாத சிறப்புற்ற.) "வடமலையில் எழுந்தருளியிருக்கும் மாயவரே, நிலையில்லாமையால் பொருள்களாக மதிக்கத்தகாத செல்வம் இளமை யாக்கை முதலிய பொருள்களை நிலையுடைப் பொருள்கள் என்று திரிபாகக் கருதி, அவற் றினிடத்துச் செல்வதும் மீண்டு வருவதுமாகி எப்பொழு தும் ஆடுகின்ற, மயக்கம் பொருந்திய எனது மனமாகிய ஊஞ்சற் பலகையை, நீவிர் தூய்மையாக்கி, மாறு படாமல் மேன்மேல் வளர்கின்ற பக்தியாகிய கயிற் றுடன் சேர்த்து, பெரியபிராட்டி பூமிப்பிராட்டி என்ற இரு தேவிமாருடன் அம் மனவூசலின் மீது ஏறி 203, பாசுரம்-77,