பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237


237 என்னும் திருக்குறள் கருத்து இப்பாடலில் பொதிந்திருத் தலைக் கண்டுமகிழலாம். - வேருெரு பாடலில் திரிகரணங்களையும் பயன்படுத் தும் முறையைக் கழறுகின்ருர். 'மத்தவரை காத்தபெரு மான்வேங்க டந்துதியார் பித்தரவர் வாயோ பிலவாயே-கித்தம்வளர் கோளுக்கண் ஓங்கிவெளிக் கொண்டலைச்சீ றம்மலையைக் காளுக்கண் சித்திரத்தின் கண்.' [மத்த-மதம்பிடித்த, வரைமலைபோன்ற யானை. பித்தர்-பைத்தியம் பிடித்தவர்; பிலம்-சுரங்கம்; கோளு. வளைதலில்லாத கண்-மூங்கில்கள்; ஓங்கி-உயர்ந்து; கொண்டலை-மேகத்தை; சீறும்-வெருட்டும்.) யானை அரசனைக் காத்த எம்பெருமான் எழுந்தருளி யிருக்கும் திருமலையைத் தோத்திரம் செய்யாதவர் பைத்தியர். அவர்கள் வாய் பிலவாய். அம் மலையைக் காணுத கண் ஒவியத்தில் அமைந்த கண் ஆகும். "நாராயணு வென்ன நாவென்ன நாவே', 'கரியவனைக் காணுத கண்ணென்ன கண்ணே' என்ற சிலப்பதிகார வரிகளை இப்பாடல் நம்மை நினைக்கச் செய்கின்றது. திருவேங்கடத்தின் பெருமை: அன்பர்களே, திருவேங்கடக் கலம்பகத்தில் திருவேங் கடத்தின் பெருமையும் பல பாக்களில் பேசப்பெறு கின்றது. ஒன்றிரண்டு சான்றுகள் காட்டி இதனை விளக்க முற்படுகின்றேன். திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத் 211. பாசுரம்-99. 212. சிலப்-2:17-படர்க்கைப் பராவல்-2,3,