பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240


240 வேங்கடத்து அப்பனின் சீர்மை: அன்பர்களே, வேங்கடத்தின் பெருமையை எடுத்து காட்டின ஆசிரியர் அம்மலையில் எழுந் தருளியிருக்கும் ஏழுமலையானின் சீர்மையையும் விதந்து ஒதுகின்ருர்; வேதவிழுப்பொருளே வேங்கடமலையில் எழுந்தருளி யிருப்பதாகக் கூறுகின்ருர், "மொழிமறை முடிமேல் எழுமுதல் அதுவே செழுவட மலைவாழ் விழுமிய பொருளே.' (மறைமுடி-உபநிடதம்; முதல்-முதற்பொருள்; விழுமியபொருள்-பரம்பொருள்.) - என்ற பாசுரத்தைக் காண்மின். வடமலைவாழ் தேவருக்கு ஆட்பட்டால் ஏற்படும் பெருமையையும் காண்போம். "யாவருக் கிந்தப் பெருமையுண் டோதுக இன்உயிர்காள்! மாவருக் கைத்திரள் பொற்குடங் தூங்கும் வடமலைவாழ் தேவருக் காட்பட்டு வைகுந்த மேவித் தினமிருப்போர் பூவருக் கம்பொரு தாள்கீழ்ப் படுமெப் புவனமுமே.”* (மா.பெரிய வருக்கை-பலாப்பழம்; பொன்குடம். பொற்குடம் போல்: தூங்கும்-தொங்கும்; ஆள்பட்டு. 218. பாசுரம்-76. 219. பாசுரம்-21.