பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241


24. அடிமைப்பட்டு; கே.வி-அடைந்து, பூ வருக்கம்-தாம் ரைப்பூவின் இனம்; பொரு தாள்-ஒக்கின்ற திருவடி, படும்-அடையும்.) 'ஏழுமலையானுக்கு ஆட்படுபவர்கள் வைகுந்தத்தில் இருப்பார்கள். எல்லாவுலகங்களும் அவர்கள் திருவடிக்: கீழ்ப்படும். வேறு எந்தக் கடவுளுக்குத்தான் இந்தப் பெருமை உண்டு?’ என்று வினவுகின்ருர் ஆசிரியர் இப் பாடலில். நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்கள் சரணம் அடைந்தவை திருவேங்கடமுடையானின் திருவடிகள்; அவற்றை மக்கள் குலம் சரணம்ஆக அடையப்பெற்ருல். ஏற்படும் பலனையும் சொல்லித் தலைக்கட்டுகின்ருர், "சரண மெனத்தன் சரணே அடைந்த சணர்சனன மரண மடுத்துவருத் தாதுதன்பதம் வாழ வைக்கும் கிரணம் விரிக்குமதி தீண்டும் சேட கிரியிலம்பொன் அரம்ை உடுத்த திருக்கோயில் மேவிய அற்புதனே. " |சரணம்-அடைக்கலம், சரண்-திருவடிகள்: சனர். மக்கள்; சனனம்-பிறப்பு; மரணம்-இறப்பு; அடுத்துஅடைந்து; தன்பதம்-தனது பரமபதம்; கிரணம்-ஒளி: விரிக்கும்-வீசும்; மதி-சந்திரன்; அம் பொன்-அழகிய பொன்; அரணம்-மதில்; உடுத்த-சூழ்ந்துள்ள.j திருவேங்கடமுடையான் தன்னைச் சரணம் அடைந் தவர்களின் பிறப்பு இறப்புத் துன்பங்களை நீக்கித் 219. பாசுரம்-9. வேங்,-16